deepamnews
இலங்கை

உரம், கிருமிநாசினிகளை பகிர்ந்தளிக்க கியூ.ஆர். குறியீட்டு முறைமை விரைவில் அறிமுகம்

உரம் மற்றும் கிருமிநாசினிகளை பகிர்ந்தளிப்பதற்காக கியூ.ஆர். குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

உர விநியோகத்திற்காக கடந்த முறை 6.7 பில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், வீழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் மீண்டெழுவதற்கான காலமாக இந்த பருவம் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் வழமை நிலையை அடையும் வரை, அவர்களுக்குத் தேவையான நிதி ரீதியான உதவிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உப குழு மற்றும் புதிய நிறுவனம்!

videodeepam

வெடுக்குநாறி மலையில் சிலை வைக்க மீண்டும் தடை

videodeepam

வெளிநாடு செல்லும் பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு

videodeepam