deepamnews
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயார் – ராஜித அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எவர் என்ன கூறினாலும், ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க, ஹர்ஷ டி சில்வா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர்.

இந்தநிலையில், கட்சி தீர்மானம் எடுக்கத் தவறினால் குழுவாக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பலர் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள்.

ஆனால் அவருடன் தேர்தலில் போட்டியிட சற்று தயக்கம் காட்டுகின்றனர். ஜனாதிபதிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் எதுவும் இல்லை.

அதேநேரம், ஜனாதிபதி நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார் என்ற கருத்து யதார்த்தமானது என ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

Related posts

தமிழ் மக்கள் தங்கள் அடையாளம் சுயமரியாதையை காப்பாற்ற முடியாத நிலையேற்படும் – இரா.சம்பந்தன் கவலை

videodeepam

இலங்கைக்கான கடன் சலுகைக்காலத்தை நீடித்தது இந்தியா:  ஒரு வருட அவகாசம் வழங்கியது

videodeepam

சூரிய கிரகணத்தை யாழ்.மக்களால் காண முடியும் – வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு

videodeepam