பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் 25ஆம் திகதி துறைசார் கண்காணிப்புக் குழுவின் விவாதத்திற்காக முன்வைக்கப்படும் என நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, நேற்றய தினம் (06) பாராளுமன்றத்தில் சமர்பிப்பதை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.