சித்திரைப் புத்தாண்டுக்காக தங்களது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களிடம் திருத்தப்பட்ட கட்டணத்தை அறவிடாமல் பேரூந்து ஊழியர்கள் அதிக கட்டணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக அதிக கட்டணம் அறவிடப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜரத்ன கருத்து தெரிவிக்கையில், மேலதிக சேவைகளை வழங்கினால் அதிக கட்டணத்தை அறவிட வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
எனினும், பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக கட்டணத்தை அறவிடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அதிக கட்டணத்தை அறவிடும், பேரூந்துகளை கண்காணித்து அவர்களுக்கு எதிராக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.
அது தொடர்பான முறைப்பாடுகளை 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.