deepamnews
இலங்கை

சிறிய குற்றங்களுக்கு ஆளாகுபவர்களை வீட்டுக்காவலில் வைக்கும்  வகையில் சட்டம் அமைக்க நடவடிக்கை – நீதி அமைச்சர் திட்டம்

சிறிய குற்றங்களுக்கு ஆளாகுபவர்களை வீட்டுக்காவலில் வைக்கும்  வகையில் சட்டம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச  தெரிவித்தார்.

கொழும்பு மெகசின், கொழும்பு ரிமாண்ட், கொழும்பு வெலிகடை. வட்டரக்க மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளை உள்ளடக்கியதாக நியமிக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டம்  நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது  விஜேதாச ராஜபக்ச  மேலும் தெரிவிக்கையில்,

 1934ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல்தடவையாக மனிதாபிமான அடிப்படையில் இந்த நாட்டு சிறைச்சாலை  ஒழுங்கு விதிகளில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் இருக்கும் நபர்களை புனர் வாழ்வளிப்பதற்காக சிறைச்சாலைக்குள்ளேயே 6 நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோன்று சிறு குற்றங்கள் செய்வர்களை வீட்டுக்காவலில் வைக்க முடியுமா என தேடிப்பார்ப்பதற்காக சட்டம் அமைப்பதற்கு தற்போது குழுவொன்று அமைக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது

videodeepam

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு

videodeepam

அடுத்த தேர்தலில் பரந்த கூட்டணியுடன் களமிறங்கும் ஜனாதிபதி ரணில்

videodeepam