இலங்கையில் கைத்தொழில்களுக்கு பாதுகாப்பு கொள்கையொன்று தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்காக பாதுகாப்பு கொள்கையை பின்பற்றுவது அவசியமானது என அவர் குறிப்பிட்டார்.
இல்லாவிடில் உள்ளுர் கைத்தொழில்களை பேணுவது பெரும் பிரச்சினையாக மாறி நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுக்க முடியாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.