deepamnews
இலங்கை

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் புதிய நடவடிக்கை: வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தகவல்

தேசிய நல்லிணக்கம் தொடர்பாக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாட்டில்  தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு அமைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை செயற்படுத்தி பாராளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொண்டு இலங்கையர்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டி கெளரவத்தை வழங்குவதற்காக பரந்துபட்ட இணக்கப்பாட்டுக்கு வருவது இந்த உப குழுவின் முதற்கட்ட நடவடிக்கையாகும்.

அத்துடன் தற்போது இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தரத்துக்கு அமைய திருத்தம் மேற்கொள்வதற்கு முன்னர், அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடுவது அமைச்சரவை உபகுழுவின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாகும். மேலும் பொறுப்புக்கூறும் செயல்முறையாக உள்நாட்டில் உண்மையை கண்டறியும் பொறிமுறையை அமைப்பது இந்த உபகுழுவின் மூன்றாம் கட்ட நடவடிக்கையாகும்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இலக்காக இருப்பது, இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி, பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வை வழங்குவதாகும். அதற்காக  ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை அடைந்துகொள்வதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சஜித் பிரேமதாச மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார் வடிவேல் சுரேஷ்

videodeepam

மின் துண்டிப்பு தொடர்பாக அமைச்சு மட்டத்தில் விரிவான விசாரணைகள் ஆரம்பம் – இந்திக்க அநுருத்த தகவல்

videodeepam

ஏடிஎம் கார்டுகளில் பணத்தை திருடிய வாலிபர் கைது  

videodeepam