deepamnews
இலங்கை

50 இலட்சம் ரூபாவை காணவில்லை: மத்திய வங்கியின் நாணய பொறுப்பு சபை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு

இலங்கை மத்திய வங்கியின்  தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் நாணய பொறுப்பு சபையின் 15  அதிகாரிகளிடம் கோட்டை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக உள்ளக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை  மத்திய வங்கி  மேற்கொண்டுள்ளது.

இந்த 50 இலட்சம் ரூபாவினை யாராவது திருடினார்களா அவ்வாறு இல்லை எனின் நிதி கணக்கீட்டின் போது ஏதேனும் தவறு இடம் பெற்றுள்ளதா என்பது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பணம் வைக்கப்பட்டிருந்த மத்திய வங்கியின் மூன்றாவது மாடியானது அதி உயர் பாதுகாப்பு கட்டமைப்புடன் அமைக்கப்பட்டிருந்ததாக அறியக்கிடைத்துள்ளது.

Related posts

விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கி.

videodeepam

தொல்லியல் திணைக்களம் தொல்லை கொடுக்கின்றது – யாழ் பல்கலை துணைவேந்தர்  

videodeepam

இரு பெண்கள் உட்பட 84 பேர் கைது: தென் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு

videodeepam