deepamnews
இலங்கை

சித்திரைப் புத்தாண்டில் நுகர்வோர் அதிகார சபை விடுத்துள்ள எச்சரிக்கை

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை வாங்கச்  செல்லும் மக்களை இலக்குவைத்து பாவனைக்கு உதவாத பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் வர்த்தக நிலையங்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பாவனைக்குதவாத வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மற்றும் உருளைக்கிழங்கு ஆகியன இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அத்துடன் முட்டைக்கு 44 ரூபாய் நிர்ணய விலையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

Related posts

விடுதலைப் புலிகளின் தலைவர் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்.

videodeepam

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் தீர்மானிக்கவில்லை –  அமைச்சர் விஜயதாச தெரிவிப்பு

videodeepam

யாழில் தாய் பால் கொடுக்க மறுத்ததால் உயிரிழந்த குழந்தை

videodeepam