ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காகவே ஜனாதிபதி வீட்டுக்கு செல்ல நேரிட்டதுடன், இந்த அரசாங்கமும் அதே செயற்பாட்டை மேற்கொண்டு இந்த சம்பவத்தை ஒடுக்கி வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் அல்லது உண்மையை மறைக்க முயல்பவர்கள் இருந்தால் அவர்களும் இப்படியே வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும் என அவர் மேலும்தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு காரணமான ஒரு அதிகாரியை அந்த பதவியில் வைத்துக்கொண்டு சட்டத்தை மதிக்காத அரசை கையாள்வது கடினம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.