நாட்டின் அபிவிருத்திக்கு சீன அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என சீன சர்வதேச ஒத்துழைப்பு முகாமையின் பிரதித் தலைவர் டான் பொசின் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுடன் சீனத் தூதரகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகமையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர்கள் குழுவும் இந்த சந்திப்பில் இணைந்துள்ளது.
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.