அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து சிவில் சமூக அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை மே 01 திகதியன்று முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மே தினக்கூட்டமானது மதியம் 1.00 மணியளிவில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்து பேரணி ஆரம்பமாகவுள்ளதாகவும் இதில் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சனைகள் மற்றும் மக்களின் கோரிக்கைகளையே முன்வைக்கவுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் தலைமையிலான அரசாங்கம் மக்களின் ஆணை இல்லாமலே செயற்படுவதாகவும் ரணில் ராஜபக்ச அரசாங்கம் சர்வதேச
நாணயநிதியத்தின் நிபந்தனைகளுடன் செயற்படவுள்ளதாகவும் அவ்வாறு செயற்பட்டால் அவை மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே தோற்றுவிக்கும் என்றும் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.