deepamnews
இலங்கை

வெசாக் தினத்தை முன்னிட்டு 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

வெசாக் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இன்று  (5) மற்றும் நாளை (6) இவ்வாறு சிறைக்கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கைதிகளின் உறவினர்கள் அவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் இனிப்புகளை பொதிகளை கைதிகளுக்கு வழங்க முடியும்.

சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க வேண்டும்.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் – ஜனாதிபதி கோரிக்கை

videodeepam

மன்னாருக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக்  சிவில் அமைப்புக்களுடன் சந்திப்பு.

videodeepam

அதிகரிக்கும் டெங்கு அபாயம்: ஒரே நாளில் 400 விற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவு

videodeepam