மனித உரிமைகளை மீறும் வன்முறைகளை தடுக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு அமைச்சர்கள் சபை ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.
மே 9 போராட்டத்தின் ஒரு வருட பூர்த்திக்கான அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று (09) விசேட அறிக்கையொன்றை வெளியிடும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலக வரலாற்றில் ஒரு பயங்கரமான கரும்புள்ளியை ஏற்படுத்திய வன்முறையின் அவலத்தின் ஒரு ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.