களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
சந்தேகநபர்களை நேற்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகளை தாக்கியமை, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அமைதியற்ற வகையில் செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.