deepamnews
இலங்கை

புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு – மேலும் சில ஆளுநர்கள் நியமனம்

எதிர்வரும் நாட்களில் மேலும் சில ஆளுநர்கள் ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

கடந்த 17 ஆம் திகதி வடக்கு,கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஏனைய ஐந்து ஆறு மாகாணங்களின் ஆளுநர்கள் தங்கள் பதவியில் தொடர்ந்தும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் மேலும் சில ஆளுநர்களை புதிதாக நியமிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியும் தன் பங்குக்கு புதிய ஆளுநர்கள் நியமனத்துக்கு சிலரை பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் தற்போதைக்கு பணியாற்றும் மூன்று ஆளுநர்களை நீக்க வேண்டாம் என்று அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், ஜனாதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியின் தரப்பில் இருவரும், பொதுஜன பெரமுன சார்பில் இன்னுமொருவருமாக புதிய ஆளுநர்கள் மூவர் நியமனம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

Related posts

நிறைவேற்றுச் சபையின் மீளாய்விற்கு பின்னர் இலங்கைக்கு 337 மில்லியன் டொலர் நிதி – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு.

videodeepam

பாடசாலைகள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு.

videodeepam

பெண்களுடன் தகாத உறவு: சர்ச்சைக்குரிய பிக்கு கைது.

videodeepam