deepamnews
இலங்கை

இரு பெண்கள் உட்பட 84 பேர் கைது: தென் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு

தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் பெண்கள் இருவர் உட்பட 84 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 19 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்மாகாணத்தின் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய 3 மாவட்டங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 19 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்களிடமிருந்து பல்வேறு வகையான போதைப் பொருட்கள், கூரிய ஆயுதங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், டீ-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், இராணுவ சீருடைகள் உள்ளிட்டவை  மீட்கப்பட்டுள்ளன.

எல்பிட்டிய, காலி, மாத்தறை பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்புகளின் 650 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 253 பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள், 252 இராணுவ வீரர்கள் மற்றும் 95 கடற்படை வீரர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் மூன்று மாவட்டங்களை அடிப்படையாகக்கொண்டு 58 வீதி தடைகள், 24 நடமாடும் சோதனைகள், 25 மோட்டார் சைக்கிள் மூலம் சோதனை நடவடிக்கைகள், 186 வீடுகள்,  1,080 வாகனங்கள் மற்றும் 2,436 பேரிடம் இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைது.

videodeepam

நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்டார் அலி சப்ரி ரஹீம்!

videodeepam

விபத்தில் உயிரிழந்தவர்களின் முழுமையான விபரம் வெளியானது

videodeepam