deepamnews
இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் 28வது காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி Mohammed bin Zayed Al Nahyan இனால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

இவ்வாறு விடுக்கப்பட்ட அழைப்பு கடிதத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் Khaled Nasser AlAmeri ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகப்பூர்வமாக கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 வரை டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது,

Related posts

திருமுறிகண்டியில் புத்தர் சிலை அமைக்க தனிநபர் முயற்ச்சி மக்கள் எதிர்ப்பு.

videodeepam

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் வெளியான சுற்றறிக்கை

videodeepam

மானிப்பாய் – சாவல்கட்டில் பேருந்து முற்றாக தீயில் எரிந்து நாசம்!

videodeepam