நாட்டிற்கு சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது சரத் வீரசேகர மேலும் தெரிவிக்கையில்,
அலி சப்ரி ரஹீம் வெறுமனே 75 லட்சம் ரூபாவை மாத்திரம் செலுத்தி விடுதலையாகியுள்ளார். உண்மையில் இது சுய மரியாதை மற்றும் நாடாளுமன்றத்தின் கெளரவ தொடர்பான பிரச்சினை.
இவர் தவறிழைத்துள்ளார். சட்டத்தின்படி குற்றவாளியாகியுள்ளார். சரியாக இருந்தால் இவர் நாடாளுமன்றத்தின் கெளரவத்தை பாதுகாத்து, பதவியை இராஜினாமா செய்யவேண்டும்
அவ்வாறு நடந்தால் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.