deepamnews
இலங்கை

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து – நதாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல்!

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் நதாஷா எதிரிசூரிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்று கொழும்பு கேட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் நதாஷா எதிரிசூரிய கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நேற்று  அதிகாலை கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில்,குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கனிணி விசாரனைப்பிரிவு அதிகாரிகளால் அவர் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, நதாஷா எதிரிசூரியவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Related posts

தவத்திரு வேலன் சுவாமிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு!

videodeepam

டெங்கு நோயை கட்டுப்படுத்தும்  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு

videodeepam

பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்

videodeepam