deepamnews
இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நேற்றய  தினம் வடமராட்சி பகுதிக்கு மக்கள் சந்திப்புக்காக சென்ற வேளை புலனாய்வாளர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அவ்விடத்துக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தொலைபேசி மூலமாக முறையிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உடனடியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு ஒன்றினை வழங்குமாறும், அவ்வாறு வழங்கிய பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

videodeepam

சர்வதேச நாணய நிதியத்திற்கு  ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

videodeepam

பள்ளி மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

videodeepam