தேசிய மக்கள் படை நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இராஜகிரிய தேர்தல் ஆணைக்குழு தலைமையகத்திற்கு முன்பாக நாளையதினம் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்தே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளைய தினம் பல வீதிகளில் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜித ஹேரத், கே.டி.லால்காந்த, சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க உள்ளிட்ட 26 பேருக்கு இந்த தடை உத்தரவு பொருந்தும்.
கோட்டை வீதி, நாவல வீதி, சரண வீதி, தேர்தல் காரியாலய வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை வீதி ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதையும் வீதிகளை மறிப்பதையும் தடை செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டங்கள் காரணமாக சாதாரணதர பரீட்சை நடைபெறும் பாடசாலைகளை முற்றுகையிடுவதுடன் பொதுமக்களின் நாளாந்த வாழ்வும் பாதிக்கப்படும் என வெலிக்கடை காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.