deepamnews
இலங்கை

தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது – சந்திரிகா

இலங்கையில் பல்லாண்டு காலமாகத் தமிழ் மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடனும் பேசி புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வைக் காண முனைந்தால் அதற்கு நான் முழுமையான ஆதரவு வழங்குவேன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு தீர்வுக்கான பேச்சை ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்தால் அந்தப் பேச்சு தோல்வியில்தான் முடிவடையும்.

தீர்வு என்ற பெயரில் தமிழ்க் கட்சிகளை இனிமேல் ஏமாற்ற முடியாது. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் இந்த  விடயத்தில் மிகவும் அவதானமாக உள்ளார்கள்.” – என்றார்.

Related posts

வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam

பேதங்களுக்கு அப்பால் நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி அழைப்பு

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு

videodeepam