deepamnews
இலங்கை

ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெறும் – சாகர காரியவசம் நம்பிக்கை

வெகுவிரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறும் எனவும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறும் என்றும்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அளுத்கம பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில்அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதிக்கு பின்னர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட ராஜபக்ஷர்கள் அரசியலில் இருந்து விலகி விடுவார்கள் என நாட்டுக்கு தீ வைத்த மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் கருதினார்கள்.

பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்புடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளோம்.

வெகுவிரைவில் ஏதாவதொரு தேர்தல் இடம்பெறும் அப்போது எமது பலத்தை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரச தலைவர் கோட்டபய ராஜபக்ஷ அரசியல் ரீதியில் தவறிழைத்தாரே தவிர பொதுஜன பெரமுன தவறிழைக்கவில்லை. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் அமைப்போம்  என்று தெரிவித்துள்ளார்.

Related posts

கிளிநொச்சியில் கொட்டி தீர்த்தது மழை.

videodeepam

இலங்கையில் உச்சம் தொட்டுள்ள மரக்கறிகளின் விலை

videodeepam

ஹெரோயினுடன் இரண்டு ஆண்கள் கைது!

videodeepam