deepamnews
இலங்கை

உடன் நடவடிக்கை எடுங்கள் – அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள உத்தரவு

கல்விப் பொது சாதாரணதர பரீட்சை முடிவடைந்த பின்னர் பாடசாலைகளின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

மாணவர்கள் கல்வி கற்க பாடசாலைகளுக்கு வருவதாகவும், அவர்கள் கல்வி கற்கும் பாடசாலையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், அந்த மாணவர்கள் எவ்வாறு பாடசாலைகளில் கற்றார்கள் என்பது தொடர்பில் ஆய்வு நடத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் சில பாடசாலைகளின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

Related posts

ஜனாதிபதி உட்பட அரசாங்கம் சதித்திட்டம் – லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

videodeepam

மீண்டும் வாகன இறக்குமதி – இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவல்

videodeepam

சாதாரணதரப் பரீட்சை பத்தாம் தரத்தில் –  கல்வி அமைச்சர் சுசில் அறிவிப்பு.

videodeepam