deepamnews
இலங்கை

24 மணித்தியாலங்களில் இலங்கையை தாக்கும் பிபார்ஜோய் சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை

பிபார்ஜோய் சூறாவளி வட மத்திய அரபிக் கடலில் நிலைகொண்டுள்ளதுடன், அடுத்த 24 மணித்தியாலங்களில் வடக்கு நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால், அதனை அண்மித்த கடற்பிராந்தியங்களில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மழையுடனான வானிலையால் நாட்டின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 24மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கு மூன்றாம் கட்ட சிவப்பு  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

Related posts

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வு

videodeepam

கனேடியத் தமிழர் பேரவையின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தத்தயார் என்கிறார் விஜயதாஸ ராஜபக்ஷ

videodeepam

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கை வருகிறார்

videodeepam