வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 48 சிறுவர் தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன் பிரகாரம் நாட்டில் இதுவரை 600 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்த தொழு நோயாளர்களில் 8.4 வீதமானோர் சிறுவர்கள் என சுகாதார அமைச்சின் தொழு நோயாளர் பிரிவு தெரிவிக்கின்றது.
இதேவேளை, அடுத்த மாதத்திலிருந்து தொழுநோயாளிகளை அடையாளம் காணும் செயற்பாடுகளில் தன்னார்வ குழுக்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தை உள்ளடக்கி முதல் கட்டத்தில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோயாளர் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.