deepamnews
இலங்கை

இனி ஒரு நிமிடம் கூட அரசியலில் இருக்க தகுதியற்றவர் விக்கினேஸ்வரன் – சுகாஷ் காட்டம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் உள்ளதாவது,

இனப்படுகொலை செய்த இராணுவத்திற்கும் விடுதலைக்காகப் போராடிய தமிழ் மக்களுக்கும் ஒரே இடத்தில் அஞ்சலி என்பதை ஏற்க உங்களால் எவ்வாறு முடிந்தது விக்கினேஸ்வரன் ஐயா அவர்களே?

சில வருடங்களுக்கு முன்னர் உங்களை உங்கள் கட்சியே முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றி அரசியலிலிருந்து அப்புறப்படுத்த முற்பட்டபோது, கட்சி பேதங்களைக் கடந்து உங்களுக்காக வீதிக்கு இறங்கியதையிட்டு வெட்கப்படுகின்றேன், வேதனைப்படுகின்றேன்.

இனி ஒரு நிமிடங்கூட தமிழ்த் தேசிய அரசியலில் நீடிக்கத் தகுதியற்றவர் நீங்கள் – என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இனப் பிரச்சினை பேச்சுவார்த்தையில் எங்களையும் சேருங்கள் – ஹக்கீம் கோரிக்கை

videodeepam

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபத்தின் நினைவேந்தலினை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகம்!

videodeepam

சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடத் தடை !

videodeepam