பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானை நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று தொழில்நுட்ப பிரச்சினையால் மீண்டும் திரும்பியுள்ளது.
ஜப்பானின் நரிட்டா நகரத்தை நோக்கிப் புறப்பட்ட யூ.எல்.454 என்ற தட இலக்கத்தை கொண்ட ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானமே 02 மணித்தியாலங்களின் பின்னர் மீள திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பயணிகள் பெரும் பீதி அடைந்திருந்ததுடன், சிரமங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.