அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேரிலாண்ட் மாநிலத்தில் தெற்கில் உள்ள பால்டிமோர் நகரின் புரூக்ளின் ஹோம்ஸ் பகுதியில் ‘புரூக்ளின் டே’ என்ற நிகழ்வுக்காக மக்கள் கூடியிருந்த இடத்தில் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
20 முதல் 30 தடவைகள் வரையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.