இலங்கையில் தரமற்ற மருந்துகளால் அண்மைக் காலமாக நோயாளர்களின் மரணங்கள் அதிகரித்துள்ளதாக மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரியின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ராகம வைத்தியாசாலையில் 23 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அன்டிபயோட்டிக் மருந்துகளை பயன்படுத்துவதை விலக்கிக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அனைத்து மருத்துவமனைகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
ராகமவைத்தியாசாலையில் தடுப்பூசிசெலுத்தப்பட்டதை தொடர்ந்து 23 வயது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறிப்பிட்ட மருந்து ஒவ்வாமையே அவரின் மரணத்திற்கு காரணமாகயிருக்கலாம் என மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரி தெரிவித்துள்ளது.
அவருக்கு தடுப்பூசி மூலம் வழங்கப்பட்ட அன்டிபயோட்டிக்கின் ஒவ்வாமையே அவரின் மரணத்திற்கு காரணம் என சந்தேகம் நிலவுவதாக ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட மருந்தினால் கடும் ஒவ்வாமை ஏற்படுகின்றது என கடந்தகாலங்களில் முறைப்பாடுகள் வெளியான போதிலும் வழமையான ஒவ்வாமை என அந்த முறைப்பாடுகள் நிராகரிக்கப்பட்டதாக மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரியின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.