இலங்கை அரசால் இந்த ஆண்டில் மட்டும் 74 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களவையில் திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கான பதிலில் மத்திய அரசு இதனை குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டுச் சிறைகளில் தவிக்கும் இந்திய கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் நிலை குறித்து, கனிமொழி மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் எழுத்துபூர்வமாக சில கேள்விகளை எழுப்பினார்.
இந்தநிலையில் இலங்கையைப் பொறுத்தமட்டில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 74 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று வெளியுறவு அமைச்சரின் சார்பில் பதிலளிக்கப்பட்டது.