deepamnews
இந்தியா

புதிய வகை கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது – விஞ்ஞானி தகவல்

புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் பிஎஃப் 7 வைரஸ் தொற்று, இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று பெங்களூரைச் சேர்ந்த டிஐஜிஎஸ் நிறுவனத்தின் முன்னணி விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் பிஎஃப் 7 வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் கவலை அளிக்கக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனம் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை ஒமிக்ரான் பிஎஃப் 7 வைரஸ் குறித்த இந்த அச்சங்கள் தேவையற்றவை என்று பெங்களூரைச் சேர்ந்த டாடா மரபியல் மற்றும் சமூக நிறுவனமான டிஐஜிஎஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று கூறியுள்ள அவர், அதேநேரத்தில் முகக் கவசம் அணிதல், கூட்டத்தை தவிர்த்தல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் பரவிய ஒமிக்ரான் வகை வைரஸ் போன்றதே, சிறிய திரிபுடன் கூடிய ஒமிக்ரான் பிஎஃப் 7 வைரஸ் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு  கச்சத்தீவை மீட்பதே நிரந்த தீர்வு! – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு

videodeepam

கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழப்பு –  இந்திய மத்திய பிரதேசத்தில் நடந்த சோகம்

videodeepam

நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் சிறையிலிருந்து  வெளியேறினர் – 31 வருட சிறைத்தண்டனைக்கு முடிவு

videodeepam