deepamnews
இலங்கை

இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை நடாத்தப்பட வேண்டும் – செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தல்

ஈழத் தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு அருகாமையில் நேற்று  மாலை இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது கறுப்பு யூலை நினைவேந்தல் பொதுச் சுடரினை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து ஏனையவர்களும் சுடரேற்றி அஞ்சலி செய்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எமது இனத்தின் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Related posts

தென்கொரிய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

videodeepam

ஏனைய கடனாளிகளுடன் சேர்ந்து, சீனா நம்பகமான உத்தரவாதங்களை வழங்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

videodeepam

பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்

videodeepam