deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு விரைவில்  நிரந்தர நியமனம்.

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவ்வாறான ஊழியர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது 12000 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், அவற்றை நிரப்புவதற்காக தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்ளவுள்ளதாக ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Related posts

68 வது நாள் கவனயீர்ப்பு முல்லைத்தீவில் முன்னெடுப்பு

videodeepam

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டங்கள் – ஜனாதிபதி அறிவிப்பு

videodeepam

சமையல் எரிவாயுயின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு !

videodeepam