deepamnews
இலங்கை

ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வகட்சி மாநாடு – புறக்கணிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி..!

இன்று நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வகட்சி மாநாட்டில் தேசிய நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் 13 ஆவது திருத்தம் குறித்து பேசப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் இணைவது தொடர்பில் இன்று  தீர்மானிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்காது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெதிதி தெரிவித்துள்ளார்.

Related posts

போலி கடவுச்சீட்டில் நாட்டுக்குள் நுழைந்த சீன பிரஜை – இராஜாங்க அமைச்சர் தலையீட்டினால் விடுவிப்பு!

videodeepam

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – எரிபொருள் விலை குறைப்பு

videodeepam

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கமாக பாராளுமன்றம் இருக்க வேண்டும் – ஜனாதிபதி

videodeepam