deepamnews
இலங்கை

போலி கடவுச்சீட்டில் நாட்டுக்குள் நுழைந்த சீன பிரஜை – இராஜாங்க அமைச்சர் தலையீட்டினால் விடுவிப்பு!

போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்று தடுக்கப்பட்ட போது, ஒழுங்கற்ற முறையில் நடந்துக்கொண்ட ஒரு சீனப்பொதுமகன் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் இலங்கையின் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் தலையீட்டினா விடுவிக்கப்பட்டனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று இந்த சம்பவம் பதிவாகியிருந்தது.

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் குறித்த சீனப்பொதுமகனின் கடவுச்சீட்டு போலியானவை என்று கண்டறிந்த போது அவரையும் அவருடன் வந்திருந்த இருவரையும் தடுத்தனர்.

இதன்போது அவர்கள், ஒழுக்கமற்ற முறையில் நடந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் தலையீட்டினால், சீனப்பொதுமகன் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டிருந்தார்.

போலியான கடவுச்சீட்டுடன் பயணித்த சீனப் பயணியை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் கோரிய இராஜாங்க அமைச்சர் அவர் ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் என்று சுட்டிக்காட்டியிருந்தார்

தமது அமைச்சின் கீழ் வரும் சில வீட்டுத் திட்டங்களுக்கு நிதி முதலீடு செய்வதற்காகவே அவர் நாட்டிற்கு வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, முதலீட்டாளர் என்று அமைச்சர் கூறிய சீனருடன் வந்திருந்த மற்றும் ஒரு சீன பிரஜையும் எகிப்தியர் ஒருவரும் இன்று காலை விடுவிக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கருத்துரைத்துள்ள குடிவரவு அதிகாரிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போலி கடவுச்சீட்டில் கூட நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

Related posts

சீனாவின் பதிலிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தங்கியுள்ளது – நிதி அமைச்சு அறிவிப்பு

videodeepam

டெங்கு நோயை கட்டுப்படுத்தும்  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு

videodeepam

அரச வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திர சிகிச்சைகளை தாமதப்படுத்த தீர்மானம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு

videodeepam