deepamnews
இலங்கை

சூட்சுமமான முறையில் வீட்டுத் தொட்டியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உற்பட்ட விசுவமடு கொழுந்துபுலவுபகுதியில் வீட்டின் பின்புறமாக உள்ள தண்ணீர் தொட்டியை பயன்படுத்தி தனியாக மறைவாக ஓரிடம் அமைக்கப்பட்டு அங்கு கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றய தினம் பொலீசார் திடீர் சுற்றிவளைப்பை மேற் கொண்டனர் .

இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் தர்மபுரம் போலீசாரால் 23.12.2023 கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து பெருமளவு கசிப்பு கோடா அளிக்கப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்படுள்ளது .

மேலும் 712 போத்தல் கோடாவும் 34 போத்தல் கசிப்பும்போலீசார் மீட்கப்பட்டுள்ளது. 24.12.2023 நாளை சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமண்றுக்கு முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்

Related posts

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்.

videodeepam

கிளிநொச்சி மாவட்டத்தின் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி கனக ரஞ்சிதம் அவர்களின் ஊடக சந்திப்பு.

videodeepam

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான அரசியல் தலைமைத்துவம் நாட்டில் இல்லை – பொதுஜன பெரமுன தெரிவிப்பு

videodeepam