deepamnews
இலங்கை

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்.

இன்று(29) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பிராந்தியத்தில் ஏற்பட்ட தாழமுக்கத்தினால் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி தர்மரட்ணம் பிரதீபன் தெரிவித்தார்.

காற்றழுத்த தாழ்வுநிலையினால் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுமாறு மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

Related posts

பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவித்தல்

videodeepam

சீன இராணுவத்தளம் ஹம்பாந்தோட்டையில் – அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு.

videodeepam

மன்னார் றோட்டறி கழகத்தால் மடிக்கணினி மற்றும் தூய்மையாக்கல் திரவங்கள் கையளிப்பு

videodeepam