deepamnews
இலங்கை

மன்னார் றோட்டறி கழகத்தால் மடிக்கணினி மற்றும் தூய்மையாக்கல் திரவங்கள் கையளிப்பு

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அங்கு தேவையின் பொருட்டு கொழும்பு தெற்கு றோட்டறி கழகத்தின் நிதி உதவியுடன் மடிக்கணினி அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது.

மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் செயல்பாட்டை மேம்படுத்தும் பொருட்டும் மற்றும் தகவல் சேகரித்தல் செயல்பாடு, இலத்திரனியல் முறையில் தகவல் பரிமாற்ற சேவையினை இலகுபடுத்தும் நோக்கிலும் மன்னார் பொது வைத்தியசாலை முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக வியாழக்கிழமை (17.11.2022) மடிக்கணினி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

இதற்கான பிரதான நிதி அன்பளிப்பினை கொழும்பு தெற்கு றோட்டறிக்கழகம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் இன்றைய தினம் கொழும்பு தெற்கு றோட்டறி கழக அங்கத்தவர்கள் மற்றும் மன்னார் றோட்டறி கழக அங்கத்தவர்கள் குறித்த செயல் திட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தொற்றுநீக்கி திரவம் 5 பெட்டிகள் இவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

Related posts

புதுக்குடியிருப்பில் கள்ளநோட்டு அடித்த ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது

videodeepam

தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

videodeepam

நாடாளுமன்றத்தில் தனது சிறப்புரிமை மீறப்பட்டதாக சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு  

videodeepam