முழங்காவில் செல்வ விநாயகர் ஆலயத்திற்கு அருகில் மதுபான சாலை அமைப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து. A32 மன்னார் சங்குப்பிட்டி வீதியின் முழங்காவில் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு முழங்காவில் பொலிசார் வருகை தந்து வீதியை மறிக்காது பிரச்சனையை கதைப்பதற்கு பொலிஸ் நிலைய வருமாறு அழைத்திருந்தனர்.
மக்கள் சார்பாக 15பேர் பொலிஸ் நிலையம் வருமாறும் பிரச்சனையை கலந்துரையாடுவதாக தெரிவித்தனர்.குறித்த இடத்திற்கு பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் பூநகரி பிரதேச சபைச்செயலாளர் ஆகியோரும் வருகை
தந்திருந்தனர்.மக்கள் சார்பாக 15பேர் முழங்காவில் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மதுபான நிலையம் அமைக்க இருப்பவருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வேறொரு இடத்தில் அமைப்பதற்கு மதுபான நிலையம் அமைக்க இருப்பவர் உடன் பட்ட நிலையில் மக்களின் ஒத்துழைப்புடன் வேறொரு இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
முழங்காவில் பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பொலிசாரால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சுமந்திரன் ஆஜராகி கிளிநொச்சி நீதிமன்றினால் குறித்த பகுதியில் அமைக்க முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.குறித்த தீர்ப்பை இரத்து செய்யக்கோரி மதுபான சாலை உரிமையாளர் சட்டத்தரணி சாலிய பிரீஸ் ஐ கொண்டு யாழ் மேல் நீதிமன்றில் ஆட்சேபணை செய்திருந்தார்
.மேல் நீதிமன்றம் கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்து மதுபான நிலையத்தை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது அத்துடன் ஆர்ப்பாட்டத்திற்கு வழுச்சேர்கும் முகமாக அப்பகுதி வர்தகநிலையங்கள் மூடப்பட்டிருந்தன