மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இந்திய மக்களவையும், மாநிலங்களவையும், சில மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நேற்று ஆறாவது நாளாக முடங்கியதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கறுப்பு உடை அணிந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.