முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள றொபேர்ட் பயஸ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசியாக உள்ள தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக 30 நாட்கள் சிறைவிடுப்பு வழங்குமாறும் அவர் அந்த கடிதத்தில் கோரியுள்ளார்.
குறித்த கடிதத்தில் தனது மனைவியும் முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைப்பாட்டிற்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு 30 நாட்கள் சிறைவிடுப்பு வழங்குமாறும் அவர் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.