deepamnews
இலங்கை

அதிகளவு போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் யாழ்ப்பாணத்தில் மரணம்

யாழ்ப்பாணத்தில், அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றும் ஒருவர் மரணத்தை தழுவியுள்ளார்.

பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே நேற்று அதிகாலை அதிகளவு போதைப் பொருளை எடுத்துக் கொண்டதால் உயிரிழந்தார் என்று இளவாலை பொலிசார் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னரே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் பயன்படுத்தியதனால் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக் கொண்டமையே காரணம் என்று மருத்துவ பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கூலிக்காக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

videodeepam

அரச ஊழியர்களுக்கான விடுமுறை விண்ணப்பங்கள் இணையவளியில் அரசு அறிவிப்பு.

videodeepam

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட இணக்கம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு

videodeepam