deepamnews
இலங்கை

இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை  கற்கைநெறியின் புதிய பிரிவு  நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் 23.09.2023 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

சனி, ஞாயிறு தினங்களிலும் அரச விடுமுறை தினங்களிலும் காலை 6.00 மணிமுதல் காலை 8.00 மணிவரை நடைபெறும் இவ்வகுப்புகளில், ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது வேறுபாடின்றி கலந்துகொள்ள முடியும்.

சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இவ் அடிப்படைக் கற்கைநெறியை பூரணமாக முடிப்பவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவிருக்கின்றன.

பயிலவிரும்புவோர் வடமாகாண கல்வி அமைச்சிலோ அல்லது அதன் இணையத்தளத்திலோ விண்ணப்பப்படிவங்களை பெற்று “கல்வி அமைச்சு,  வடமாகாணம், இளைஞர் விவகார அலகு, செம்மணிவீதி, நல்லூர், யாழ்ப்பாணம்” எனும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்குமாறும், மேலதிக தகவல்களை 021 222 2203 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார்.

Related posts

நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம்: மகிழ்ச்சித் தகவல் வெளியானது

videodeepam

மின் கட்டண அதிகரிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்துக்கு  சம்பிக ரணவக்க கடிதம்  

videodeepam

மொட்டுக்கட்சியை துண்டு துண்டாக கூறுபோட்ட ரணில்  – நளின் பண்டார தெரிவிப்பு

videodeepam