deepamnews
இலங்கை

4 மடங்கு அவலங்களை மக்கள் சந்திக்கின்றனர் – ஜி. எல். பீரிஸ் கவலை.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் பொதுமக்கள் நான்கு மடங்கு அவலங்களை சந்தித்துள்ளதுடன் முப்பது வருடகால யுத்தத்தின் போது சுகாதார சேவை இவ்வாறான வீழ்ச்சியை சந்திக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், நேற்று தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளின் நடைமுறைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும், நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுந்துள்ளதாக தெரிவித்த  பீரிஸ், வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதை கணக்காய்வாளர் அறிக்கைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலவச சுகாதாரம் என்பது தற்போது அவப்பெயர் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், ஸ்தம்பிதமடைந்துள்ள தற்போதைய அரசாங்கத்தை வெளியேற்ற அனைவரும் அணிதிரள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது செய்யப்பட்ட விதம் அருவருப்பானது எனவும், ‘அஸ்வசும’ என்பது அரசாங்கத்தின் புரளி எனவும், வெளிப்படைத்தன்மை இல்லாத வேலைத்திட்டம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

QR முறை தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

videodeepam

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களம் இறங்கும் தமிழன்

videodeepam

அதிகாரிகள் ஏசி அறைகளை விட்டு வெளியே வந்து நாட்டின் நிலைமையை ஆராய வேண்டும் – சஜித் பிரேமதாச

videodeepam