2020 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்ற முற்பட்டமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக சதி செய்தமை, சாட்சிகளைக் குழப்பியமை, அமெரிக்க பிரஜைகளின் உரிமைகளுக்கு எதிராக சதி செய்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த குற்றப்பத்திரிகையானது 2021 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட கெபிடல் கலவரம் சார்ந்த விடயங்களின் விசாரணைகளை உள்ளடக்கியுள்ளது.
மீளவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள 77 வயதான டொனால்ட் ட்ரம்ப் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
இரகசிய அரச ஆவணங்களைத் தவறாகக் கையாண்டமை, நடிகை ஒருவருக்கு பணம் வழங்கியமை உள்ளிட்ட 2 குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் ஏற்கனவே எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.