deepamnews
சர்வதேசம்

வளி மாசடைதலினால் ஐரோப்பாவில் வருடாந்தம் 1200 சிறார்கள் உயிரிழப்பு

வளி மாசமடைதலினால் வருடாந்தம் 1,200 இற்கும் அதிகமான சிறார்கள் ஐரோப்பாவில் உயிரிழக்கின்றனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றாடல் முகவரம் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டபோதிலும, பல ஐரோப்பிய நாடுகளில் வளி மாசு மட்டமானது உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல் அளவை விட கூடுதலாக உள்ளதாகவும் குறிப்பாக, மத்திய – கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் இத்தாலியில் இந்நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகள் உட்பட 30 இற்கும் அதிகமான நாடுகளில் ஐரோப்பிய சுற்றாடல் முகவரம் தெரிவித்துள்ளது.

முக்கிய கைத்தொழில்துறை நாடுகளான, ரஷ்யா, உக்ரேன், பிரித்தானிய ஆகியன இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை. இதனால், வளிமாசடதலினால் உயிரிழக்கும் சிறார்களின் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலும், ஐஸ்லாந்து, துருக்கி, சுவிட்ஸர்லாந்து, நோர்வே, லீச்டென்ஸ்டைன் ஆகியற்றிலும் 238,000 பேர் வளி மாசடைதலினால் உயிரிழந்தனர் என கடந்த நவபம்ர் மாதம் ஐரோப்பிய சுற்றாடல் முகவரகம் தெரிவித்திருந்தது.

Related posts

இருக்கைப்பட்டி அணியாமைக்கு மன்னிப்புக் கோரிய இங்கிலாந்து பிரதமர்

videodeepam

உக்ரைனில் போரில் முடங்கி பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

videodeepam

ரஷ்ய போர் கப்பலை தாக்கும் உக்ரைன் கடல்வழி ட்ரோன்கள்

videodeepam