deepamnews
இலங்கை

கைதிகளில் 60 வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள்.

இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலமாக நாட்டிலுள்ள சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 29000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், மேலதிக ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இது நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கையின் 2 மடங்காகும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் நெரிசலை குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கருத்து தெரிவிக்கையில், 20 வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளை புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் விடுதலை செய்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாக கூறினார்.

சிறைக்கைதிகளின் உணவு தேவைக்காக மாத்திரம் வருடாந்தம் 5.5 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

Related posts

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதே எனது முடிவு – சித்தார்த்தன் எம்.பி.

videodeepam

விடுதலைப் புலிகளின் தலைவர் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்.

videodeepam

போலித் தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam