புதிய மருத்துவ சட்டமூலத்தை 6 மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போதைய மருத்துவ கட்டளைச் சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, சிறந்த சுகாதார சேவையை வழங்குதல், மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மருத்துவப் பொருட்களின் கொள்வனவிற்கு 30 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீடு செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மருந்து பொருட்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.